குறைந்தது முருங்கைக்காய், அவரைக்காய் விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி, கேரட் விலை என்ன தெரியுமா.?

First Published Feb 26, 2024, 8:32 AM IST

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக முருங்கைக்காய் விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது விற்பனை விலை குறைந்துள்ளது.  
 

உருளைக்கிழங்கு விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

Vegetables Price Today

சுரைக்காய் விலை நிலவரம்

குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

பூசணி விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சொந்த குரலில் பாடி அசத்திய நடிகர் கொட்டாச்சி.. அதை ரசித்துக்கொண்டே ரத்த தானம் செய்த இளைஞர்கள் - வீடியோ!

click me!