குறைந்தது தக்காளி, வெங்காயம் விலை.. உச்சத்தில் நீடித்த கேரட், முருங்கைக்காய் விலை தற்போது என்ன தெரியுமா.?

First Published | Mar 4, 2024, 8:14 AM IST

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் ஒரு சில காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விற்பனை விலை அதிகரித்துள்ளது.அதே நேரத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
 

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

Koyambedu

வெண்டைக்காய் விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

வரியை சேமிக்க இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.. முழு விபரம் இதோ..

click me!