சரசரவென குறைந்த காய்கறி விலை.. கோயம்பேட்டில் தக்காளி, வெண்டைக்காய், கேரட் விலை என்ன தெரியுமா.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை விலை குறைந்துள்ளது. 
 

The price of vegetables has decreased slightly in KoyamPet Chennai KAK

தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய் வரைக்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

The price of vegetables has decreased slightly in KoyamPet Chennai KAK
Vegetables Price Koyembedu

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கத்திரிக்காய் விலை என்ன.?

காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

vegetables

வெண்டைக்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்துவிட்டீங்களா.? எத்தனை வயது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் தெரியுமா.?
 

Latest Videos

click me!