Tamilnadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையும், சில மாவட்டங்களில் பனிமூட்டமும் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஏரிய விட்டவாரே மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். மேலும் ரயில் மற்றும் விமான சேவையும் பாதிக்கப்படுகிறது. காலையில் பனிபொழிவு இருந்தாலும் மற்றொரு புறம் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26
லேசான பனிமூட்டம்
அதாவது இன்று முதல் 31 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
36
வறண்ட வானிலை
அதேபோல் பிப்ரவரி 01 தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும் பிப்ரவரி 02 மற்றும் 03 தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
56
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
66
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல் நாளை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.