Voter Registration Camp : வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? உங்களுக்காக வருகிறது சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்!

Published : Nov 17, 2026, 09:27 PM ISTUpdated : Nov 17, 2026, 09:31 PM IST

Voter Registration Camp : 2027 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களுக்காக நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்கள் நடைபெற உள்ளன. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்.

PREV
15
இன்னும் வாக்காளர் பதிவு செய்யவில்லையா?

வாக்காளர் பட்டியலில் இன்னும் உங்கள் பெயர் இல்லையா? 18 வயது பூர்த்தியடைந்தும் வாக்காளர் அடையாள அட்டை பெறவில்லையா? கவலை வேண்டாம்.

புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், ஏற்கெனவே உள்ள வாக்காளர் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக பொதுமக்கள் விண்ணப்பிக்க குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் மிக முக்கியமான உரிமைகளில் ஒன்று வாக்களிக்கும் உரிமை. தேர்தல் வரும்போது மட்டுமே வாக்காளர் அடையாள அட்டையைத் தேடாமல், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

அந்த வகையில், 2027ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (Special Summary Revision – SSR 2027) என்ற நடவடிக்கையை அறிவித்துள்ளது.

இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத இளைஞர்கள், முதல் முறை வாக்களிக்கத் தயாராகும் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமின்றி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எந்தெந்த தேதிகளில் முகாம்கள் நடைபெறுகின்றன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன படிவங்களைப் பயன்படுத்த வேண்டும்? என்பதைப் பார்க்கலாம்.

25
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2027 என்றால் என்ன?

சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (Special Summary Revision (SSR) என்பது வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்து, தகுதியுள்ள அனைவரின் பெயர்களும் இடம்பெறுவதை உறுதிசெய்ய இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.

இதன் முக்கிய நோக்கங்கள்:

  • 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது.
  • வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதியான நபர்களை இணைப்பது.
  • இறந்தவர்களின் பதிவுகள் உள்ளிட்ட தகுதியற்ற பதிவுகளை உரிய நடைமுறையின்படி நீக்குவது.
  • ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெறுவதைச் சரிசெய்வது.
  • பெயர், வயது, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்துவது.
  • இடம் மாறிய வாக்காளர்களின் முகவரியைப் புதுப்பிப்பது.


யாரெல்லாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்?

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பின்படி, 01.10.2026 அன்று அல்லது அதற்கு முன்பாக 18 வயது நிறைவடைந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ள அனைவரும் பதிவு செய்யலாம்.

குறிப்பாக,

  • 01.01.2027 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள்.
  • ஏற்கெனவே 18 வயது பூர்த்தியாகியும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள்.
  • முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்ற இளைஞர்கள்.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்.


முக்கிய அறிவிப்பு : 2027ஆம் ஆண்டில் , ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயதைப் பூர்த்தி செய்யவிருப்பவர்களும் முன்கூட்டியே விண்ணப்பம் அளிக்கலாம். அந்தந்த தகுதி நாளின்படி அவர்களது பெயர் சேர்க்கப்படும்.

அதாவது, இந்த நான்கு தகுதி நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் 18 வயதைப் பூர்த்தி செய்ய இருப்பவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம்.

35
சிறப்பு வாக்காளர் பதிவு முகாம் எப்போது நடைபெறும்?

புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், ஏற்கெனவே உள்ள விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

குறிப்பாக நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

  • முதல் முகாம் - நவம்பர் 21, 22 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை
  • இரண்டாவது முகாம் - நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை


இந்த நாட்களில் பொதுமக்கள் தங்களது வாக்காளர் பதிவு தொடர்பான தேவைகளுக்கு சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

45
பல்வேறு வகையான படிவங்கள்

படிவம் 6 (Form 6) - புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.

படிவம் 6A (Form 6A) - வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்புபவர்களுக்கான படிவம்.

படிவம் 7 (Form 7) - வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய அல்லது பெயர் சேர்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப் பயன்படும்.

படிவம் 8 (Form 8) - வாக்காளர் விவரங்கள் புதுப்பிப்பு, முகவரி மாற்றம், பெயர் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்வதற்குப் பயன்படும்.

55
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் நேரடியாக அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன

ECINET செயலி: தேர்தல் ஆணையத்தின் ECINET மொபைல் செயலி மூலம் வாக்காளர் பதிவு தொடர்பான சேவைகளைப் பெறலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளமான (Voters Service Portal) : https://voters.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தேவையான படிவத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.

உதவி எண் : 1950 என்ற வாக்காளர் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான படிவத்தைத் தேர்ந்தெடுத்து, கேட்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
  • மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு கணக்கை உருவாக்கி உள்நுழையவும்.
  • Form 6 தேர்வு செய்யவும்
  • புதிய வாக்காளர் பதிவு செய்வதற்கான படிவத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • கேட்கப்படும் வயது மற்றும் இருப்பிடச் சான்றுகளை இணைத்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
  • கிடைக்கும் விண்ணப்பக் குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.


வாக்குரிமை என்பது ஒவ்வொரு தகுதியுள்ள குடிமகனின் ஜனநாயக உரிமையாகும். எனவே, தேர்தல் நேரத்தில் கடைசி நிமிடத்தில் அவசரப்படுவதைத் தவிர்த்து, இப்போதே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இதுவரை பதிவு செய்யாதவர்கள் நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories