TVK Ministers List: முதல்வராகும் விஜய்.. 13ம் தேதி ட்விஸ்ட் இருக்கு.. தவெக அமைச்சர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்!

Published : May 10, 2026, 08:15 AM IST

TVK Vijay: சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது. ஆளுநரின் அழைப்பை ஏற்று முதல்வராக பதவியேற்க உள்ள விஜய்யின் புதிய அமைச்சரவை குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

PREV
15
ஆட்சியமைக்கும் தவெக

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்த தவெக யாரும் எதிர்பாராத வகையில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்தது. ஆனால் பெருபான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காமல் திணறி வந்தார். பின்னர் ஒருவழியாக திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததை அடுத்து பெருபான்மைக்கு தேவையான 118 இடங்களை தாண்டி 120ஆக உயர்ந்தது.

25
13ம் தேதி பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு

இதனையடுத்து நேற்று இரவு தவெக தலைவர் விஜய், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தலைவர்களுடன் சேர்ந்து ஆளுநர் அர்லேகரிடம் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் தரப்பில் இருந்து தமிழகத்தில் புதிய அரசை அமைக்க தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வரும் 13ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வராக பதவியேற்க உள்ள விஜய்க்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

35
சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா

புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான இலாகாக்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

45
தவெக அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? யார்?

அதன்படி, பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை - விஜய், பொதுப்பணித்துறை - செங்கோட்டையன், நகராட்சி நிர்வாகத்துறை - என்.ஆனந்த், மின்சாரத்துறை - சி.டி.ஆர். நிர்மல்குமார், விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை - ஆதவ் அர்ஜுனா, ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன், சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை - அருண்ராஜ், பள்ளி கல்வித்துறை - வெங்கட் ரமணன் ஆகியோர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

55
காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள்

இவர்களுடன் விஜய்யின் நண்பரும், அமைச்சரவை வீழ்த்திய தூத்துக்குடி எம்எல்ஏவுமான ஸ்ரீநாத், சத்யபாமா, காரைக்குடி எம்எல்ஏ பிரபு, கீர்த்தனா, ஜேப்பியார் மருமகனும், ஜேப்பியார் பொறியியல் கல்லூரியின் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த மரியம் வில்சன் உள்ளிட்டோருக்கும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் வழங்கப்பட இருக்கிறது. இதில், ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories