2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் யாருடன் கூட்டணி? உண்மையை போட்டுடைத்த பிரசாந்த் கிஷோர்! அதிர்ச்சியில் இபிஎஸ்!

Published : Mar 01, 2025, 01:55 PM ISTUpdated : Mar 01, 2025, 02:47 PM IST

நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு விழாவில், 2026 தேர்தலில் தனித்து போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி அமைக்க விரும்பினாலும், தவெக விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.

PREV
17
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் யாருடன் கூட்டணி? உண்மையை போட்டுடைத்த பிரசாந்த் கிஷோர்! அதிர்ச்சியில் இபிஎஸ்!
TVK Vijay

நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிவாண்டி வி.சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளும் திமுக மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.

27
DMK Government

மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்களே தவெகவின் ஒரே முழு முதல் கொள்கை எதிரி. அடுத்த திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பெரியாரையும், அண்ணாவின் பெயரையும் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் நமது அடுத்த அரசியல் எதிரி என்று திமுகவை கடுமையாக விமர்சித்து அரசியல் அரங்கை அதிரவிட்டார். குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். 

37
AIADMK

ஆனால் அதிமுக குறித்து மாநாட்டில் தவெக தலைவர் விஜய் விமர்சிக்காதது பெரும் சலசலப்பை எற்படுத்தியது. இதனால் சட்டமன்ற தேர்தலில் விஜய் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தவெக தலைவர் விஜய் போகும் இடமில்லாமல் ஆளும் திமுகவை மட்டுமே விமர்சிப்பதில் குறியாக இருந்தார். அதேநேரத்தில் அதிமுகவும் விஜய் குறித்து விமர்சிக்காமல் அடங்கி வாசித்து வந்தனர்.

47
Prashant Kishor

இந்நிலையில் 2026ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலை மையமாக கொண்டு கட்சி பணிகளில் தவெக தலைவர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். திமுகவை வீழ்த்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை தவெக இறக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும், தவெகவில் வியூக வகுப்பாளராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்துள்ளார். இவர்கள் எற்கனவே திமுகவுக்கு வேலை செய்தவர்கள் என்பதால் அவர்களது பலம் பலவீனம் என்ன என்பது தெரியும். 

57
TVK Vijay Vs Prashant Kishor

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு பேசிய போது என்னைப் பொருத்தவரை விஜய் ஒரு தலைவர் அல்ல. ஆனால், தமிழ்நாட்டின் நம்பிக்கை அவர். அதேபோல் தவெகவை நான் அரசியல் கட்சியாக பார்க்கவில்லை. அதனை ஒரு புதிய அரசியல் இயக்கமாக பார்க்கிறேன்.   விஜய் தலைமையிலான தவெக அந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார். 

67
Vijay and Prashant Kishor

இந்நிலையில், பிரபல தனியார் டிவி சேனலுக்கு பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர்:  2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே விஜய்யின் முடிவு. விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்புகிறது. ஆனால் அதிமுக உடன் கூட்டணி அமைக்க தவெக, விரும்பவில்லை. விஜய் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் வெற்றி பெறுவார். விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பார் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

77
Edappadi Palanisamy

எப்படியாவது 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வந்த நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories