ஊட்டி, கொடைக்கானல விடுங்க... தமிழ்நாட்டில் உள்ள இந்த டாப் 10 ஹிடன் டூரிஸ்ட் ஸ்பாட் போங்க; சில்லுனு இருக்கும்!

Published : Apr 25, 2026, 01:17 PM IST

தமிழ் நாட்டில் மலைப்பிரதேசங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். அவற்றைவிட ரம்மியமான மலைப்பிரதேசங்கள் நிறைய உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
111
Top 10 Hidden Tourist Spots in Tamilnadu

தமிழ்நாட்டில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட இடங்கள் தான் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், தெரிந்திருக்கிறது. ஆனால் இதையும் தாண்டி இயற்கை எழில் மிகுந்த மலைப்பிரதேசங்கள் நம்ம தமிழ்நாட்டில் நிரம்பி இருக்கிறது. இதுமாதிரியான இடங்கள் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கும், அம்மாவட்ட மக்களுக்கும் தெரியும். அப்படி தமிழ்நாட்டில் இருக்கும் ஹிடன் டூரிஸ்ட் ஸ்பாட் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

211
பச்சைமலை

திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பரவி இருக்கக்கூடிய கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு குளுகுளு கிளைமேட் இருக்கும். இந்த மலையில் இருந்து தான் சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதை ஆறு உள்ளிட்ட பல நதிகள் உற்பத்தியாகிறது. மேலும் இங்கு மங்கலம் அருவி, மயிலூற்று அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளையும் எண்ணற்ற வியூ பாயிண்ட்களையும் நாம் பார்த்து ரசிக்கலாம். இந்த பச்சமலையில் முந்திரியும், பலாப்பழமும் அதிகளவில் விளைவிக்கிறார்கள். அங்கு சென்றால் மறக்காம வாங்கி சாப்பிடுங்க.

311
வத்தல்மலை

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது வத்தல்மலை. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஏலகிரி, ஏற்காடு வரிசையில் வத்தல்மலையும் ஒன்று. இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. தருமபுரியில் இருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் பயணித்தால் நாம் இந்த மலை உச்சியை அடையலாம். இந்த மலை உச்சிக்கு போக ஏலகிரியை விட அதிகமான கொண்டைஊசி வளைவுகளை கடக்க வேண்டும். இங்கு நிறைய வியூ பாயிண்ட்களும், இயற்கையான நீர்வீழ்ச்சிகளும் அமைந்திருக்கு. இங்கு நிறைய காஃபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

411
ஜவ்வாது மலை

இது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள முக்கியமான மலை. இது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு நாம் முக்கியமாக சுற்றிப்பார்க்க வேண்டியது பீமன் அருவி. இந்த அருவி அருகிலேயே ஏரி ஒன்றும் அமைந்துள்ளது. இதில் படகு சவாரியும் செய்யலாம். மேலும் ட்ரெக்கிங் போக விருப்பம் உள்ளவர்கள் இந்த ஜவ்வாது மலையில், 3 அடி உயரம் இருக்கக்கூடிய குள்ள மனிதர்கள் வாழ்ந்ததற்கான குகைகளையும் பார்க்கலாம்.

511
பழனி மலை

இது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பழனியில் இருந்து இந்த மலைத்தொடர் வழியாக 65 கிலோமீட்டர் நாம் பயணம் செய்தால், கொடைக்கானலுக்கு போயிடலாம். இந்த வழியாக செல்லும் போது பாலாறு அணை, பைன் பாரஸ்ட் என ஏராளமான இடங்களை பார்த்து ரசிக்கலாம்.

611
பன்றிமலை

இந்த மலையும் பழனி மலைத்தொடரில் தான் அமைந்துள்ளது. மினி கொடைக்கானல் என சொல்லப்படும் இந்த பன்றி மலை, திண்டுக்கல்லில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இதமான கிளைமேட் இருக்கும். இங்கு நாம் ரசிக்க நிறைய வியூ பாயிண்ட்களும், நீர் வீழ்ச்சிகளும் அமைந்துள்ளது. இங்கு டிரெக்கிங் செல்லலாம், கேம்பிங் போட்டும் தங்கலாம். கூட்டமே இல்லாத இடத்துக்கு செல்ல விருப்பப்படுபவர்கள் இங்கு செல்லலாம்.

711
தாமரைக்கரை மலை

இந்த மலைப்பகுதி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அமைந்துள்ளது. இது ஈரோட்டில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நாம் பார்க்க வேண்டியது வரட்டுப்பள்ளம் அணை. இந்த இடத்தில் பைக்கில் பயணம் செய்தால் அருமையாக இருக்கும். பல கொண்டை ஊசி வளைவுகளை கடந்து தான் இந்த தாமரைக்கரை மலைப்பகுதியை அடைய முடியும்.

811
திம்பம் மலை

ஈரோடு மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தான் திம்பம் அமைந்துள்ளது. இது ஈரோட்டில் இருந்து 84 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு யானைகள், புலி, சிறுத்தைகளுடைய நடமாட்டம் இருக்கிறது. அதனால் அந்த சாலையில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். திம்பம் மலை உச்சிக்கு செல்ல 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும்.

911
ஐயூர் சுற்றுச்சூழல் பூங்கா

இந்த இடம் ஓசூரில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 3400 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவில், நிறைய மூங்கில் மரங்கள் இருக்கும். இது யானைகள் வாழக்கூடிய ஒரு பாதுகாப்பான வனப்பகுதி. இந்த காட்டுப்பகுதியில் நிறைய நீர்வீழ்ச்சிகளும் இருக்கிறது. இங்கேயே தங்கி சுற்றிப்பார்க்கும் வசதியும் உள்ளது. அதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும்.

1011
சித்தேரி மலை

இந்த மலை தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நீர்வீழ்ச்சி மற்றும் அணை உள்ளது. ஒருநாளைக்கு சுற்றுலா சென்றுவர விரும்புபவர்கள் இங்கு சென்று வரலாம்.

1111
மாஞ்சோலை

இது திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. வனத்துறையினரின் அனுமதி பெற்று தான் இங்கு சென்று சுற்றிப்பார்க்க முடியும். மாஞ்சோலை கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் அமைந்திருக்கக்கூடிய, ஒரு குளிர்ச்சியான மலைப்பிரதேசம், இந்த பகுதி முழுவதும் எக்கச்சக்கமான தேயிலை தோட்டங்களால் நிரம்பி உள்ளது. அங்கு நிறைய வியூ பாயிண்ட்களும் உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories