Tamilnadu Government: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு! என்னென்னு கவனீச்சீங்களா!

First Published Sep 21, 2024, 8:20 AM IST

Tamilnadu Government: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு உள்ளிட்ட அரசுத் துறைகளில் காலி பணியிடங்களை அதிகரித்து நிரப்பப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu government

திமுக தேர்தல் வாக்குறுதியாக இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், அரசு துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஆட்சிக்கு வந்த பின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா, துபாய் ஆகிய உலக நாடுகளுக்கு சென்று வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் முதலீடுகளை ஈர்த்து வந்தார். 

இதையும் படிங்க: Tamilnadu Government: மாணவர்களுக்கு ரூ.1,00,000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம்? எதற்காக? இதோ முழு தகவல்

CM Stalin

கடந்த சில நாட்களுக்கு முன் 6,244 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் எழுதினர். பின்னர் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. ஆனால், காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் காலிப் பணியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Latest Videos


TNPSC Group 4 Exam

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 நபர்களுக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 நபர்களுக்கும் என மொத்தம் 68,039 நபர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  TNPSC: குரூப் 4 தேர்வர்களுக்கு குட்நியூஸ்! டிஎன்பிஎஸ்சி எடுத்த அதிரடி முடிவு! வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

TNPSC Group 4 Vacancy Increase

மேலும், கடந்த சுதந்திர தின விழா உரையின்போது தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தவாறு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 75,000 இளைஞர்கள் பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட அமைப்புகள், அரசுத் துறைகள் வாயிலாக ஆயத்தப் பணிகள் செவ்வனே நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவரும் தொகுதி 4 தேர்வைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு துறையும் தங்களது காலிப் பணியிடங்களை நேரடியாகத் தெரிவித்து தேவையான பணியாளர்களை பெற்று வருகிறது. தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும் காலி பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. 

Employment opportunities for youth

கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வுகளை ஒப்பிடுகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் முறையே 9351, 6491 மற்றும் 7301, தேர்வுகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படுகையில் முறையே 11949, 9684 மற்றும் 10139 என அதிகரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டை பொறுத்தவரையில் 6244 என அறிவிக்கப்பட்டிருந்த காலிப்பணியிடங்கள் தற்பொழுது 6724 என அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கும். இது மட்டுமல்லாமல் பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தவாறு மேலும் 75,000 இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.

இதையும் படிங்க:   School Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான சூப்பர் செய்தி! பள்ளிக்கல்வித் துறை!

Government job

அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொழில் முன்னேற்றம் குறித்து எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளின் வாயிலாகவும், “நான் முதல்வன்” திட்டம் உள்ளிட்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் முயற்சியால் 5,08,055 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

Naan Mudhalvan

தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக பொறியியல், தொழில்நுட்பம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் போன்ற படிப்புகள் பயிலும் 27,73,847 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெற்று தரும் பணியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து
மேற்கொண்டு வருகிறது.

click me!