டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீனமயமாகி வரும் உலகில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரம் பல லட்சத்தில் சம்பளம் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் திடீரென பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கவும் செய்யும். எனவே அதிக சம்பளமாக கிடைதாலும் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தான் தனியார் நிறுவனங்களில் உள்ளது.
25
அரசு வேலை
அதுவே அரசு வேலை என்றால் கேட்கவா வேண்டும், வார விடுமுறை, மாதம் 1ம் தேதி சம்பளம் என பல சலுகைகளை அள்ளிக்கொடுக்கும். இதன் காரணமாகவே கஷ்டப்பட்டு தேர்வு எழுது வெற்றி பெற்றால் போதும் அரசு பணியில் கடைசி காலம் வரை நிம்மதியாக இருக்கலாம். எனவே அரசு பணிக்காக தேர்வர்கள் இரவு பகல் பாராமல் படித்து வருகிறார்கள். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியானது.
35
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு
தற்போது இதில் தேர்வானவர்களுக்கான முதன்மைத் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற டின்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அறிவிக்கை எண்கள்: 04/2025 நாள் 01.04.2025 மற்றும் 05/2025 (01.04.2025) வாயிலாக நேரடி நியமனத்திற்கு வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-I பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-ஏ (தொகுதி-1ஏ பணி) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 15.06.2025 அன்று முற்பகல் நடைபெற்றது.
இத்தேர்விற்கான முதன்மை எழுத்துத் தேர்வு முறையே 01.12.2025 முதல் 04.12.2025 மற்றும் 08.12.2025 முதல் 10.12.2025 முற்பகல் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.gov.in மற்றும் www.tnpscexams.in-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
55
ஹால் டிக்கெட் வெளியீடு
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.