அமைச்சர் ராஜ்மோகன் கட்டியிருந்த வாட்ச் விலை ரூ.45 லட்சமா? அவரே கொடுத்த விளக்கம் என்ன?

Published : Nov 19, 2026, 07:49 AM IST

டெல்லி பயணத்தின்போது தான் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை குறித்துச் சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சைக்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.

PREV
14
டெல்லி பயணமும் சந்திப்பும்

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தான் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்கு திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.

தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), ஆதவ் அர்ஜுனா மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளனர். அங்கு மத்தியக் கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் ரூ.5,000 கோடி 'சமக்ர சிக்‌ஷா' (Samagra Shiksha) நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி ஆலோசனை நடத்தினார்.

24
வாட்ச் சர்ச்சை எழுந்த பின்னணி

சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் அணிந்திருந்த ஆடையும், கையில் கட்டியிருந்த கைக்கடிகாரமும் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. சாதாரணப் பொருளாதாரப் பின்னணியிலிருந்து அரசியலுக்கு வந்த ராஜ்மோகன், பல லட்சம் மதிப்புள்ள ஆடம்பரக் கடிகாரத்தை அணிந்திருப்பதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, அது பிரபல 'ரோலக்ஸ்' (Rolex) நிறுவனத்தின் வாட்ச் என்றும், அதன் மதிப்பு 50,500 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை) இருக்கும் என்றும் சிலர் தகவல்களைப் பரப்பினர்.

34
ராஜ்மோகன் விளக்கம் & எச்சரிக்கை

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ராஜ்மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் (எக்ஸ்) விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே. கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்துப் பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் 'ஃபேக் நியூஸ் ஃபேக்டரிகள்' (Fake News Factories) கூட்டத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

44
அரசியல் பின்னணி

அரசியலுக்கு வருவதற்கு முன்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், யூடியூபர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் பேச்சாளர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வந்தவர் ராஜ்மோகன். தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன இவருக்கு, முதலமைச்சர் விஜய் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை வழங்கினார். சட்டப்பேரவையிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories