Tiruchengode: திருச்செங்கோடு தேரோட்டத்தின்போது சோகம்! தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு! என்ன நடந்தது?

Published : May 31, 2026, 06:47 PM IST

Tiruchengode Temple Car: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
12
திருச்செங்கோடு தேரோட்டத்தின்போது சோகம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை புரிகின்றனர். இந்த நிலையில், இன்று (மே 31) அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரை சாலைக்கு கொண்டு வரும் பணியின்போது திடீரென தேருக்கும், சுவருக்கும் இடையில் சிலர் சிக்கிக் கொண்டனர். சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கிய ஹர்ஷவர்தன் (19) என்கிற இளைஞர் பலத்த காயமடைந்தார்.

தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹர்ஷவர்தன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலத்த காயம் அடைந்த்ந கல்லூரி மாணவர் சஷ்டிகன் (19) தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தேரோட்டத்தின்போது நிகழ்ந்த இந்த கோர சம்பவம் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது. திருச்செங்கோடு தேரோட்டத்தின்போது நடந்தது என்ன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

22
முதல்வர் விஜய் இரங்கல்

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (31.05.2026) காலை 10.30 மணியளவில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேர்த்திருவிழாவின்போது தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த கவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட ஹர்ஷவர்தன் (வயது 18). த/பெ.கோவிந்தராஜா, என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்து விட்டார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

5 லட்சம் நிவாரண நிதி

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருசடிகன் (வயது 19) த/பெ கௌரிசங்கர் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ள்ளேன்

Read more Photos on
click me!

Recommended Stories