தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி அரசியலை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டு பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிராக விடுதலைச் சிறத்தைகள் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாளவன் கலந்து கொண்டார்.
25
அண்ணாமலையும், நயினாரும் இந்து துரோகிகள்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், “நான் முருகனை தரிசித்து வரும்போது பூசப்பட்ட திருநீற்றை வைத்து அரசியல் செய்யாதீர்கள். நான் பூசியது அவர்களுக்கு பிரச்சனை கிடையாது. அதனை அழித்தது தான் பிரச்சினை. அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் இந்து மக்களின் உண்மையான துரோகிகள். இவர்கள் கட்டமைக்க நினைப்பது இந்து ராஷ்டிரியம் கிடையாது. பார்ப்பனிய ராஷ்டிரியம். முருகன் என்ற பெயரை உச்சரிக்கவே எச்.ராஜாவுக்கு உரிமை கிடையாது.
35
பிராமண தேசியம் பேசும் சீமான்
ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு துணைபோகின்ற ஒவ்வொருவரும் இந்து மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்வதாகவே பொருள். தமிழக மக்கள் இருவரை அடையாளம் கண்டுவிட்டார்கள். ஒருவர் விஜய், மற்றொருவர் சீமான். இவர்கள் இருவருமே ஆர்எஸ்எஸ், பாஜக பெற்றெடுத்தப் பிள்ளைகள். பிராமன கடப்பாரை கொண்டு பெரியாரின் திராவிட கோட்டையை இடிப்பேன் என சீமான் சொல்கிறார். இவ்வளவு நாள் அவர் தமிழ் தேசியம் பேசுகிறார் என்று தான் நம்பிக்கொண்டிருந்தோம். தற்பொழுது தான் தெரிகிறது. அவர்கள் பேசுவது இந்து தேசியம், இந்து தேசியம் கூட கிடையாது, பிராமண தேசியம்.
அதே போன்று திமுகவை வீழ்த்தவே ஒருவர் கட்சி தொடங்கி இருக்கிறார். திமுகவை தீய சக்தி என்பது தான் விஜய்யின் ஒரே நோக்கம் என்றால் தமிழக மக்களுக்காக கட்சித் தொடங்கவில்லை. ஆர்எஸ்எஸ்க்காக தொடங்கி இருக்கிறீர்கள். நேரடியாக பைனலில் மட்டும் தான் விளையாடுவேன் என்பது விஜய்யின் அரசியல் அறியாமை.
55
திமுக தூக்கி எறிந்தாலும் கவலைப்படமாட்டேன்
எனக்கு பதவி ஆசை இருந்திருக்கும் பட்சத்தில் விஜய்யின் பின்னால் சென்றிருப்பேன். எங்களுக்கு சீட் பிரச்சினை கிடையாது. கொள்கை தான் முக்கியம். பாமகவின் ஒரு பிரிவு திமுக கூட்டணிக்கு வந்தாலும் அதனை நாங்கள் ஏற்க மாட்டோம். சனாதனத்தை எதிர்ப்பதற்காகவே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். நாளையே திமுக என்னை தூக்கி எறிந்தாலும் கவலைப்பட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.