தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை - பாலக்காடு - நெல்லை (வ. எண். 16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - மதுரை (வ. எண். 12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.