சற்று குறைந்த தக்காளி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி விலை கடந்த சில வாரங்களால ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் தற்போது விலையானது குறைந்து ஒரு கிலோ 55 முதல் 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது, பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவரைக்காய் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒன்று 40 முதல் 50 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இஞ்சி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூண்டு விலை ஒரு கிலோ 320 முதல் 370 ரூபாய் வரை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது