tomato onion
தக்காளி, வெங்காய விலை என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் சமையல் என்பது சாத்தியமில்லாத காரியம். இந்த நிலையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதமாக கிடு, கிடுவென அதிகரித்தது.
குறிப்பாக தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு செய்யப்பட்டது. திடீரென விலை அதிகரித்து ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு உயர்ந்ததால் இல்லத்தரசிகள் பாதிக்கப்பட்டனர்.
tomato price
விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
வீட்டில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் அளவை குறைத்து சமைத்து வருகின்றனர். மேலும் 5 கிலோ வாங்கி செல்லும் நிலை மாறி ஒரு கிலோ மட்டுமே தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்லும் நிலை உருவானது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நிலவிய அதிகப்படியான வெப்பம் மற்றும் மழைப்பொழிவு காரணமாக நடப்பாண்டு காய்கறிகளின் விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி லாரிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதன் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்தது. இந்த நிலையில் தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளது.
கொட்டப் போகுது மழை; நீங்கள் வீட்டில் செய்ய வேண்டியது இதுதான்; மறக்க வேண்டாம்
tomato price in chennai
மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு
இதன் காரணமாக ஒரு கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகிறது. தக்காளி விலை தற்போது குறைந்திருந்தாலும், வரும் நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மீண்டும் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பாக பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல வெங்காயத்தையும் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
tomato price in tamilnadu
கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே தக்காளி மற்றும் வெங்காயத்தை ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது தொடர்பான அறவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒன்று 10 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
vegetable price
பச்சை காய்கறி விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது