உச்சத்தில் நீடிக்கும் கேரட் விலை.. சரசரவென சரிந்த பூண்டு விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

First Published Mar 6, 2024, 8:34 AM IST

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை, அதே நேரத்தில் கேரட் விலையானது உச்சத்திலையே நீடிக்கிறது. மேலும் பூண்டின் விலையானது குறைந்துள்ளது. 
 

பீட்ரூட் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Vegetables Price Koyembedu

சுரைக்காய் விலை.?

குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

Latest Videos


கேரட் விலை நிலவரம்

பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Vegetables Price Today

பூண்டு விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் நீடித்த பூண்டின் விலையானது திடீரென சரிந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கும் மேல் விற்பனையான நிலையில், தற்போது 200 முதல் 220ரூபாய் வரை விற்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் 

School College Holiday: குட்நியூஸ்! வரும் 11-ம் தேதி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!

click me!