இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அதுசம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு அக்டோபர் 8-ம் தேதி அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். தளவாய் சுந்தரம் அந்நிகழ்வில் கலந்துகொண்டது தொடர்பாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் மீண்டும் நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.