TASMAC:'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய் கூட வாங்கினாலும்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

Published : May 23, 2026, 06:56 PM IST

TASMAC Rules: டாஸ்மாக்கில் மதுவுக்கு கூடுதல் பணம் வாங்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நவடிக்கை எடுக்கப்படும் என தவெக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

PREV
13
டாஸ்மாக் கடைகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வந்த நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இந்த பண்டிகை காலங்களில் வெளியாகும் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களில் வசூலை விட டாஸ்மாக் வசூல் அதிகமாக உள்ளது. அரசு வருமானத்தை ஈட்டித் தருவதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இந்த டாஸ்மாக் அரசுக்கு வருமானம் ஈட்டித் தந்தாலும் இதனால் மக்களுக்கு உண்டாகும் துன்பம் கொஞ்சம் நஞ்சமல்ல. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மது போதையில் தான் இந்த சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மது குடித்து விட்டு வண்டி ஓட்டுவதால் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி சாலையில் பயணிக்கும் மற்றவர்களும் பாதிப்படைகின்றனர். மேலும் சில குடும்பங்களில் ஆண்கள் சம்பாதிக்கும் பெருமளவு பணத்தை மதுவுக்கே செலவிடுவதால் அவர்களின் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறது.

23
717 டாஸ்மாக் கடைகளை மூட தவெக அரசு உத்தரவு

இப்படியாக டாஸ்மாக் குறித்து தீமைகள் அடுக்கிக் கொண்டே போனாலும் திராவிட கட்சிகள் பெயரளவுக்கு டாஸ்மாக் கடைகளை குறைத்ததே தவிர, இதனை முழுமையாக மூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் விஜய்யின் தவெக அரசு பேருந்து நிலையங்கள், கோயில்கள், கல்வி நிலையங்களில் அருகில் உள்ள சுமார் 717 டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவிட்டது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

டாஸ்மாக்கில் மதுவுக்கு கூடுதல் பணம் வாங்குவது காலம் காலமாக நடந்து வரும் நிலையில், மதுவுக்கு கூடுதல் பணம் வாங்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நவடிக்கை எடுக்கப்படும் என தவெக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கல்வி நிலையங்கள். வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதின் அடிப்படையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

33
டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

இன்று வரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைணந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்கள் அவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மீள பணியமர்த்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டுமெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அரசின் இந்த நடவடிக்கை 'குடி'மகன்களை குளிர்வடைய செய்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories