அக்டோபரில் கனமழையுடன் தொடங்கிய வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் நிறைவு பெறுகிறது. நவம்பர், டிசம்பரில் எதிர்பார்த்த மழைக்கு பதிலாக பனிப்பொழிவு நிலவிய நிலையில், இனி வரும் நாட்களிலும் வறண்ட வானிலையுடன் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15ம் தேதி மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அக்டோபரில் இப்படி என்றால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை எப்படி இருக்குமோ என பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
24
பனிபொழிவு
அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. மழைக்கு பதிலாக கடும் பனிபொழிவு நிலவியதால் பொதுமக்கள் காலை 9 மணி வரை வெளியே செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் நிறைவு பெற உள்ள நிலையில் மழை மற்றும் பனிபொழிவு குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
34
நிறைவு பெரும் வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும். இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.