தவெக 2ம் ஆண்டு துவக்க விழா! பங்கேற்காத ஆதவ் அர்ஜுனா! என்ன காரணம்?

Published : Feb 02, 2025, 03:08 PM ISTUpdated : Feb 02, 2025, 03:50 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் ஆதவ் ஆர்ஜுனா பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
தவெக 2ம் ஆண்டு துவக்க விழா! பங்கேற்காத ஆதவ் அர்ஜுனா! என்ன காரணம்?
தவெக 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்வு! பங்கேற்காத ஆதவ் அர்ஜுனா! என்ன காரணம் தெரியுமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச் செயலா​ளராக இருந்த ஆதவ் ஆர்ஜுனா அக்கட்​சி​யில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் ஆதவ் ஆர்ஜுனா இணைந்தார்.  அவருக்கு தவெகவில் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 

24
தவெக கட்சி தொடங்கி இரண்டாம் ஆண்டு

இந்நிலையில் இன்று நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இதை முன்னிட்டு இன்று பனையூரில் தவெகவின் 2ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு விஜய் மூன்று பக்கம் கொண்ட பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 1967இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர். 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது, இவ்விரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும்தான். அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே. இந்தப் பெருவெற்றிகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம் என தெரிவித்திருந்தார். 

34
தவெக தலைமை அலுவலகம்

மேலும் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளை விஜய் திறந்து வைத்து ஒவ்வொரு சிலைக்கும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: காலையில் தவெகவில்! மாலையில் திருமாவோடு சந்திப்பு! அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ் அர்ஜுனா!

44
ஆதவ் ஆர்ஜுனா

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா நிகழ்வில் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார். அதாவது உத்தரகாண்டில் நடக்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணியின் ஒருங்கிணைப்பாளராகப் பங்கேற்றிருப்பதால் த.வெ.க-வின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories