தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.
power cut
பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு
ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மின்தடை செய்யப்படுவது முழுவதுமாக தவிர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் தமிழகத்தில்
நடைபெற்று வரும் பொதுத்தேர்வு. 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்றதை அடுத்து தற்போது 10ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக மின்தடை செய்யப்படுவதில்லை. அப்படி இருந்த போதிலும் தவிர்க்க முடியாத சில காரணத்தால் ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை எற்படும் இடங்கள்
இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை பார்ப்போம். திருவண்ணாமலையில் மாவட்டத்தில் சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு, கோணமங்கலம், வேளுகம்பட்டு.நந்தியம்பாடி, மருத்துவம்பாடி, இடையான்குளத்தூர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், கெங்கைசூடாமணி, உலகம்பட்டு, கூடுவாம்பாடி, மோடிபட்டு, பரிதிபுரம், ஒதலவாடி, ஊத்தூர், கிழக்குமேடு, கொத்தந்தவாடி, தேவிகாபுரம், தச்சம்பாடி, முடையூர், ஆத்துரை, நரசிங்கபுரம், தும்பூர், தேவிமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.