தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை! மின்வாரியம் அறிவிப்பு!

Published : Nov 11, 2025, 07:48 AM IST

தமிழகத்தில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, தஞ்சாவூர், மற்றும் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
16
துணை மின் நிலையங்கள் பராமரிப்பு பணி

தமிழகத்தில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

26
தமிழகம் முழுவதும் மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

36
கோவை

பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை, செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம், வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம், அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 வரை மின்தடை ஏற்படும்.

46
ஈரோடு

சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

56
தஞ்சாவூர்

ஈச்சன்கோட்டை, மருங்குளம்.துறையூர், வடசேரி, கீழக்குறிச்சி, திருமங்கலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 3 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

66
உடுமலைப்பேட்டை

கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories