பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்.! இனி கவலையே இல்லை- தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்

Published : Feb 03, 2025, 08:48 AM IST

வேலை தேடி வெளியூர் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. தோழி விடுதி திட்டத்தின் கீழ் 9 மாவட்டங்களில் 11 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 6 இடங்களில் புதிய விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.

PREV
14
பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்.! இனி கவலையே இல்லை- தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்
பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்.! இனி கவலையே இல்லை- தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்

வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சி காரணமாக கிராம்ப்புறங்களில் உள்ள பெண்கள் படித்த படிப்பிற்கு வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை உள்ளது. இதன் காரணாமக பாதுகாப்பு எப்படி இருக்கும், வசதிகள் இருக்கமா.? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் சென்னை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பெண்கள் தனியார் விடுதியில் அதிக கட்டணம் கொடுத்து தங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாங்குகிற சம்பளம் விடுதி கட்டணத்திற்கும் உணவிற்கும் செலவாகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பெண்களுக்கு தனி விடுதி அமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 
 

24
தமிழகத்தில் தோழி விடுதிகள்

இதனையடுத்து வேலைக்காக வெளியூர் வரும் பெண்களுக்காக தமிழக அரசு சார்பாக தோழி விடுதி என்ற திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த விடுதியில் பெண்களுக்கு பாதுகாப்பிற்காக  சிசிடிவி கேமரா வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல்  24 மணி நேர குடிநீர் வசதி, சுகாதாரமான கழிவறை என  பல்வேறு வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது. தோழி விடுதிகளில் மாத அடிப்படையில், நாள் கணக்கில் பெண்கள் தங்கி கொள்ளலாம்.
 

34
புதிதாக 6 இடங்களில் தோழி விடுதிகள்

இந்த நிலையில் இந்த விடுதியின் அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1,200 பெண்கள் தங்கும் வகையில் மேலும் 6 இடங்களில் 'தோழி மகளிர் விடுதிகள்' அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில்  70 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. சென்னையில் 2 இடங்களில் 950 பேர் தங்கும் வகையில் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன. இதே போல ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு விடுதி அமைக்கப்படவுள்ளது. 

44
கட்டண விவரங்களை என்ன.?

ஏற்கனவே நடைமுறையில் உள்ள விடுதியில் சேர விரும்புபவர்கள்  9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அதில் விடுதி வசதிகள், கட்டணங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், விடுதி காலியிடங்கள் தொடர்பாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  techexe@tnwwhcl. என்ற இணைய தள முகவரியில் மூலம் சந்தேகங்க ளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories