இலவசமாக தையல் இயந்திரம் வேண்டுமா.! தமிழக அரசின் அதிரடி சரவெடி அறிவிப்பு

First Published | Sep 25, 2024, 11:59 AM IST

தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் தகுதியான பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை இங்கே விளக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மக்கள் நல திட்டம்

தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் புதிய, புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், மகளிர் உரிமை தொகை, திருமண உதவித்திட்டம், கர்ப்பிணி பெண்கள் உதவி திட்டம், கணவனை இழந்த மற்றும் கைம்பெண்களுக்கு சுய தொழில் தொடங்க உதவி திட்டம், விதவை மறு திருமண உதவி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு நிதி உதவியும் தமிழக அரசு கொடுத்து வருகிறது. இது மட்டுமில்லாமல் அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்து வருகிறது. மேலும் சொந்த தொழில் தொடங்க திட்டமிடும் நபர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி தேவையான கடனுதவிக்கும் ஏற்பாடு செய்துள்ளது. 

சொந்த தொழில் தொடங்க உதவி திட்டம்

மேலும் பெண்கள் பெயரில் நிலங்கள் வாங்கி சொந்த தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் மானியத்திலும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதே போல ஆடு, மாடு , கோழி போன்றவை வளர்க்கவும் உதவித்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

பெண்கள் சொந்தமாக முன்னேற வேண்டும் யாரையும் நம்பி இருக்க கூடாது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற சீரிய நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டமானது செயல்படுத்தப்படுகிறது.  இந்த திட்டத்திற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

Tap to resize

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது கைம்பெண்கள் பொருளாதாரத்தின் நழிந்த பிரிவை சேர்ந்த பெண்கள்,  மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தகுதிகள்

வயது

 20 முதல் 40 தெரிந்திருக்க வேண்டும்.

 தையல் தெரிந்திருக்க வேண்டும்,

 ஆண்டு வருமானமாக 72 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது 

ஆவணங்கள்

1.மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

2. இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள். 75% மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மாராக இருத்தல் வேண்டும்.

3.தையல் பயிற்சி பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி.?

இந்தத் திட்டத்திற்கு இ சேவை மையம் மூலமாகவும், https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

Latest Videos

click me!