4 நாட்கள் தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே
தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Summer holiday special train : தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வீடுகளில் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் எப்போது தொடர் விடுமுறை கிடைக்கும் வெளியூர்களுக்கு செல்லலாம், இயற்கையான மற்றும் குளுமையான இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என திட்டமிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வகையில் வருகிற மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை, 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகும், இதனை தொடர்ந்து 31 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி வருட கணக்கு முடிக்கும் நாள் என்பதால் அரசு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பொதுமக்கள் உற்சாகமாக உள்ளனர். எனவே தெற்கு ரயில்வே சார்பாக தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக ரம்ஜான் பண்டிகை விடுமுறையையொட்டி சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து போதனூருக்கு ரயில் இயக்கப்படுகிறது. (ரயில் எண் 06027/06028 ) இந்த ரயிலானது மார்ச் 30ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதனூருக்கும், மார்ச் 31ஆம் தேதி போதனூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போதனூரை சென்று செல்கிறது.
இந்த ரயிலில் 3ஆம் வகுப்பு ஏசி பெட்டிகள் 10, இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் 7 இணைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. எனவே கோவைக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதே போல கோடை விடுமுறையையொட்டி சாரல்பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது. ரயில் எண் 07230/07229 இந்த ரயிலானது மார்ச் 2ஆம் தேதி, 9ஆம் தேதி, 16ஆம் தேதி என 13 சேவைகள் இயக்கப்படவுள்ளது. இதே போல கன்னியாகுமரியில் இருந்து சாரல்பள்ளிக்கு ரயில் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் சரளப்பள்ளி, குண்டூர், நெல்லூர், திருத்தணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரியை சென்று சேருகிறது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 5, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 10, இரண்டு முன்பதிவு செய்த பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத இரண்டு பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கபடவுள்ளது.