முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர் செந்தில் பாலாஜி. மின்சாரம் மற்றும் வருமானம் கொட்டக்கூடிய துறையான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை செந்தில் பாலாஜி நிர்வகித்து வருகிறார். மதுபான துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மார்ச் 6 ,7, 8 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.