ஈரோட்டில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் பொதுமக்களை சந்தித்தார். இந்த முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன், தனது பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஜெ.ஜெயலலிதா படத்தை பாக்கெட்டில் வைத்து, அதனுடன் தவெக கொடியை அணிந்து அவர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
உரையை தொடங்கிய செங்கோட்டையன், “புரட்சி த...” என ஆரம்பித்த நிலையில், உடனே சுதாரித்து கொண்டு “இது தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம்; புரட்சித் தளபதி” என திருத்திக் கூறினார். இந்த சம்பவம் கூட்டத்தில் சிறிய பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை பெற்றது.
அதிமுகவிலிருந்து தவெக-வில் இணைந்த பிறகு செங்கோட்டையன் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி, கரூர் சோக சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் முக்கிய அரசியல் கூட்டம் என்பதாலும், விஜயின் ஈரோடு மக்களின் அரசியல் களத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தன.
கோவையில் விஜய் ஈரோடு வந்தபோது அவரை வரவேற்ற செங்கோட்டையன், தொடர்ந்து விஜயின் பிரச்சார வாகனத்தில் ஏறி உரையாற்றினார். பொதுவெளியில் முதன்முறையாக தவெக மேடையில் செங்கோட்டையன் பேசிய நிகழ்ச்சி இதுவாகும்.