நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்காக அவர்களை வீதிப் போராட்டங்கள், அரசியல் அழுத்தம் அல்லது சமூக ஊடக மிரட்டல்களுக்கு உள்ளாக்க முடியாது என்றும், ஒரு நீதித்துறை முடிவுக்கு எதிராக மேல்முறையீடு, மறுஆய்வு அல்லது பிற சட்டப்பூர்வ நடைமுறைகள் மட்டுமே அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தீர்வு என்றும் அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிரான போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் அனுமதிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும், நீதிபதிகள் அச்சமின்றி தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் என்றும் அது மேலும் கூறுகிறது. உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பு, மனுதாரர் தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக சட்டரீதியான புகார்களை அளித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்கப்படவில்லை
மனுவின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, போராட்டக்காரர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர், மதுரை கிளை கூடுதல் பதிவாளர் மற்றும் சைபர் கிரைம் பிரிவினருக்கும் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் வாதிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தான் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.