பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை சென்னை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர் கதவை பூட்டிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் மூலம் கதவை உடைத்து கைது செய்துள்ளனர்.
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை சென்னை ஆதம்பாக்கம் காவல்துறையினர் இப்போது கைது செய்துள்ளனர். போதைப்பொருள் வருமானத்தை பயன்படுத்தி இந்த படத்தை தயாரித்து இருந்ததாக சவுக்கு சங்கர் விமர்சனம் செய்திருந்தார்.
இது தொடர்பாக ரெட்டன் ஃபாலோ என்ற படத்தின் தயாரிப்பாளர் சவுக்கு சங்கரிடம் கேட்டபோது, அவரும் அவரது அலுவலகத்தில் உள்ளவர்களும் தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக அப்படத்தின் இயக்குநர் சாதிக் பாஷா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
23
கதவை பூட்டிக்கொண்ட சவுக்கு சங்கர்
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சவுக்கு சங்கரை இன்று கைது செய்துள்ளனர். முன்னதாக இன்று காலை இரண்டு போலீஸ் வேன்களில் 20 காவலர்கள் சவுக்கு சங்கரை கைது செய்வதற்காக வந்தனர். ஆனால் காவலர்களை உள்ளே விடாமல் கதவை பூட்டிக்கொண்ட சவுக்கு சஙகர் தனது வழக்கறிஞர் வந்தால் தான் கதவை திறப்பேன் என்று கூறினார்.
கதவை உடைத்து கைது செய்த போலீஸ்
தொடர்ந்து வழக்கறிஞர்கள் வந்தபோதிலும் கதவை திறக்க முடியாது என சவுக்கு சங்கர் பிடிவாதமாக இருந்தார். இதனால் காவல்துறையினர் தீயனைப்பு துறையினரை தீயணைப்பு வாகனங்கள் மூலம் வரவழைத்து சவுக்கு சங்கர் வீட்டின் கதவை கடப்பாறை மூலம் உடைத்து அவரை கைது செய்துள்ளனர். திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்வதால் சவுக்கு சங்கர் கைதை திமுகவினர் வரவேற்றுள்ளனர்.
33
சவுக்கு சங்கர் என்ன தீவிரவாதியா?
அதே வேளையில் ஒரு மிரட்டல் புகாருக்காக ஒரு நபரை கதவை உடைத்து தீவிரவாதியை போல் கைது செய்வதா? என காவல்துறைக்கு அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலக வரலாற்றில் முதல்முறையாக திராவிட மாடலா ஆட்சியில் பத்திரிக்கையாளரை கைது செய்ய
தீயணைப்பு வாகனம், கான்வாய், கடப்பாறை ஆகியவற்றை காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.