இந்த 3 பிரபல ரவுடிகள் தலைநகர் சென்னைக்குள் நுழைய தடை! யாரெல்லாம் தெரியுமா?

Published : Apr 26, 2025, 07:46 AM ISTUpdated : Apr 26, 2025, 07:58 AM IST

சென்னையில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, A+ சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா, லெனின் உள்ளிட்டோருக்கு சென்னைக்குள் நுழைய ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

PREV
15
இந்த 3 பிரபல ரவுடிகள் தலைநகர் சென்னைக்குள் நுழைய தடை! யாரெல்லாம் தெரியுமா?
chennai commissioner arun

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இதுதொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என விமர்சித்து வந்தனர். இதனையடுத்து  ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு  அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு அவ்வப்போது என்கவுண்டர் மற்றும் ரவுடிகளை சுட்டு பிடிப்பது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வந்ததை அடுத்து தற்போது ரவுடிகள் அடங்கி ஒடுங்கி இருந்து வருகின்றனர். 

25
Chennai Rowdy

A+ சரித்திர பதிவேடு குற்றவாளிகள்

இந்நிலையில் A+ சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா, லெனின் உள்ளிட்டோர் மீது சென்னை நகர காவல் சட்டப்பிரிவு 51 ஏ-ன் படி ஒரு வருடத்திற்கு சென்னைக்குள் வருவதற்கு காவல் ஆணையரகம் தடை விதித்துள்ளது. நீதிமன்ற  வழக்கு, காவல் விசாரணை தவிர பிற காரணங்களுக்கு சென்னைக்குள் வரக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்! இதற்கெல்லாம் மூலக்காரணமே இவங்க தான்! மதுரை ஆதீனம் சொன்ன பகீர்!
 

35
Nedungundram Surya

நெடுங்குன்றம் சூர்யா 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா (34). இவர் மீது பீர்க்கன்கரணை, ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம் காவல் நிலையலங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது  ரவுடி சூர்யா பாஜகவில்  பட்டியல் அணி மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். 

இதையும் படிங்க: 200க்கும் மேற்பட்ட வழக்கு.. பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா.. வழங்கப்பட்ட மாநில பதவி!

45
Rocket Raja

ராக்கெட் ராஜா

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா.தென் தமிழகத்தின் பிரபல ரவுடியாக அறியப்பட்ட வெங்கடேஷ் பண்ணையார் மறைவிற்குப் பிறகு ராக்கெட் ராஜாவும் கொலை, அடிதடி என பல வழக்குகளில் கைதாகி பலமுறை சிறைக்கு சென்றவர். 

55
Rowdy Lenin

ரவுடி லெனின்

தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் லெனின். இவர் மீது 6 கொலை , 12 கொலை முயற்சி, கஞ்சா, ஆள் கடத்தல் நில மோசடி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

Read more Photos on
click me!

Recommended Stories