ஆளுங்கட்சிக்கு எதிரா முழுசா திரும்பிய புதியதலைமுறை! தவெக -அதிமுக கூட்டணி வேண்டும் என அடம்பிடிக்கும் தொண்டர்கள்

Published : Oct 11, 2025, 10:24 AM IST

அதிமுகவிற்காக எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொள்ள வந்திருந்தபோது அங்கு தவெக கொடியுடன் வந்த சிலர், அதிமுக - தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

PREV
12
TVK - ADMK Alliance

கரூர் துயர சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை கூட்டங்களில் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகளை பார்க்க முடிகிறது. அந்த கொடிகளை பார்த்து, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது என்று பழனிச்சாமியும் உற்சாகமாக பேசினார். இதனிடையே அதிமுகவின் பரப்புரை கூட்டத்திற்கு தவெக கட்சிக் கொடியுடன் வந்தவர்கள் உண்மையிலேயே அக்கட்சியை சேர்ந்தவர்கள் தானா என்பதை அறிய அவர்களிடம் புதிய தலைமுறை பிரத்யேக பேட்டி ஒன்றை எடுத்திருக்கிறது.

தவெக - அதிமுக கூட்டணி கோரும் தொண்டர்கள்

அதில் பேசியுள்ள தவெகவினர், இங்கு கொட்டும் மழையிலும் எடப்பாடியாரை பார்க்க வந்ததற்கு காரணமே எங்களுக்கு ஒரு மாற்றம் தேவை. எடப்பாடியார் அனுபவம் மிக்கவர், விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார். இதனால் விஜய், எடப்பாடியாருடன் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். திமுக-வை அரவே ஒழிக்க வேண்டும். எடப்பாடியாருடன் கூட்டணி வைத்து தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என நாங்கள் ஆசைப்படுகிறோம். திமுகவை ஒழிக்க அதிமுக - தவெக ஒன்று சேர வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என திட்டவட்டமாக கூறி இருக்கின்றனர்.

22
விஜய் கையில் கூட்டணி முடிவு

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியில் பரப்புரைக்கு தவெக கொடியுடன் வந்த மேலும் சிலரிடமும் புதிய தலைமுறை பேட்டி எடுத்துள்ளது. அவர்கள் கூறுகையில், நல்லது செய்வார் என்கிற நம்பிக்கையில் தான் கூட்டணிக்காக அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். கூட்டணி முடிவு விஜய் கையில தான் இருக்கு என கூறிய அவர்கள் தவெக கொடியுடன் விஜய் வாழ்க என கோஷமும் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசுக்கு எதிராக திரும்பும் புதிய தலைமுறை

தற்போது புதிய தலைமுறை முழுவதுமாக ஆளுங்கட்சியான திமுகவை எதிர்க்க தொடங்கி உள்ளதா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை சேனல் தூக்கப்பட்டது. கரூர் விவகாரத்து திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டதால் வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த சேனலை அரசு கேபிளில் இருந்து திமுக தூக்கி இருப்பதாக அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்துக்கு பின்னர் தவெக - அதிமுக கூட்டணி பற்றி செய்தி வெளியிட அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் தொண்டர்களை தேடிப்பிடித்து புதிய தலைமுறை பேட்டி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories