பெட்ரோல் பங்குகளுக்கு தலைவலியாக மாறிய UPI மோசடிகள்

Published : May 06, 2025, 06:43 PM IST

தமிழ்நாட்டில் பெட்ரோல் பங்க்களை வாடிக்கையாளர்கள் மோசடி செய்து பணத்தை மீட்டு வருகின்றனர். இதனால் பெட்ரோல் பங்க்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இந்த மோசடிகள் குறித்து டீலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

PREV
16
பெட்ரோல் பங்குகளுக்கு தலைவலியாக மாறிய UPI மோசடிகள்
Petrol bunks in Tamil Nadu

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்கள் ஒரு புதிய நெருக்கடியை எதிர்கொள்கின்றன. கார்டு அல்லது UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் பரிவர்த்தனை செய்யவில்லை என்று கூறி, வங்கிகளில் தவறான புகார்களை பதிவு செய்கின்றனர். வங்கிகள் அந்தப் புகார்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல், அவற்றை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்புகின்றன. சைபர் கிரைம் பிரிவு சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் தினசரி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வங்கிக் கணக்கை முடக்கிவிடுகிறது.

26
Petrol Bunk current account

முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்பட வைக்க ஏழு முதல் பத்து நாட்கள் வரை ஆகிறது. இந்த நாட்களில் பெட்ரோல் பங்க் சார்பில் வங்கி மற்றும் காவல் நிலையத்துக்கு பல முறை அலைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று டீலர்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான பெட்ரோல் பங்க்களுக்கு ஒரே கரண்ட் அக்கவுண்ட் மட்டுமே இருக்கிறது. அந்தக் கணக்குகளை திடீரென முடக்குவது கொள்முதல், விநியோகம் மற்றும் பிற தினசரி செயல்பாடுகளை சீர்குலைக்கிறது என்கிறார்கள்.

36
POS machines

சில சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்களிடம் POS இயந்திரங்களைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றாலும் அவர்களின் கணக்கு முடக்கப்படுவதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர். எந்தத் தவறும் செய்யாமலே எங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படுகிறது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

46
Demonetisation

"பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்குமாறு சொன்னார்கள். இன்று, கிட்டத்தட்ட இரண்டில் ஒரு வாடிக்கையாளர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சைபர் கிரைம் போலீசார் முறையான சோதனைகள் இல்லாமல் கணக்குகளை முடக்கினால், நாங்கள் வாடிக்கையாளர்களிடம் பணமாகவே வசூல் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது அவர்களுக்கும் சிரமமாக இருக்கும்," என்று பெட்ரோல் பங்க் டீலர் ஒருவர் கூறுகிறார்.

56
Tamil Nadu Petroleum Dealers Association (TNPDA)

புனே மற்றும் நாக்பூரில் இதுபோன்ற வழக்குகள் பரவலாகிவிட்டதாக தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் (TNPDA) தெரிவித்துள்ளது. அங்கு எரிபொருள் பயன்பாடு சராசரியாக மாதத்திற்கு 600 கிலோலிட்டர்கள் வரை உள்ளது. இது தேசிய சராசரியான 140 கிலோலிட்டரை விட மிக அதிகம்.

மகாராஷ்டிர டீலர்கள் ஏற்கனவே வேலைநிறுத்தங்களை அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டிலும், ஒவ்வொரு மாதமும் இதுபோல இரண்டு, மூன்று வழக்குகள் பதிவாகின்றன என்று TNPDA தலைவர் KP முரளி கூறுகிறார். இது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்றும்  முரளி சொல்கிறார்.

66
UPI recovery window

தமிழகத்தில் அதிகரிக்கும் இதுபோன்ற பெட்ரோல் பங்க் மோசடி குறித்து பதிலளித்த தமிழக சைபர் கிரைம் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர், பணத்தை மீட்டெடுக்க வங்கிக் கணக்கை விரைவாக முடக்குவது அவசியம் என்றார். "UPI பரிவர்த்தனையில் பணத்தை மீட்பதற்கான நேரம் ஒன்று முதல் இரண்டு மணிநேரம் மட்டுமே; கார்டு பரிவர்த்தனைகளுக்கு, இரண்டு முதல் நான்கு மணிநேரம். எனவே ஒவ்வொரு நொடியும் முக்கியமானது," என்று அவர் சொல்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories