தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மக்கள் தொகை அடிப்படையில் தான் தொகுதி மறுசீரமைப்பு செய்வோம் என பாஜக அரசு கூறுகிறது. ஆனால் தற்போதுள்ள மக்கள் தொகை அடிப்படையை கணக்கில் எடுத்தால், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என கூறப்படுகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனையடுத்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலம் உள்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தினை ஒரு அமைச்சர் மற்றும் எம்.பி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து நேரில் சென்று முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான சஞ்சய்குமார் தாஸ் பர்மா வருவகை தந்துள்ளனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்க உள்ளது.
இதையும் படிங்க: கூட்டுக்குழுவில் ஒரு முடிவு எடுக்கப்படும்.! இந்தியாவை காக்கும்- ஸ்டாலின் அதிரடி
Pawankalyan
அந்த கட்சி சார்பில் மக்களவை உறுப்பினர் உதய் சீனிவாஸ் கலந்து கொள்ள உள்ளார். இது பாஜக தேசிய தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஜனசேனா கட்சி பங்கேற்கும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.