NEW RATION CARD : தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன்கடைகளின் மூலம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அரசின் திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு, இயற்கை சீற்றம் இழப்பீடு உள்ளிட்டவைகளுக்கு ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் தற்போது 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளதாக கூறினார். இதனிடையே புதிய ரேஷன் கார்டிற்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரேஷன் கடையில் புகார் பெட்டி
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது நியாயவிலைக்கடைகளில் புகார் பெட்டிகள் இல்லையெனவும், புதிய ரேஷன் கார்டு நிலை தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ராஜேஷ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி,
தமிழ்நாட்டில் 37 ஆயிரம் முழு நேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருவதாகவும், அங்கு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க புகார் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். அத்தியாவசிய பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை தொடர்பாக 2400 புகார்கள்,
புதிய ரேஷன் கார்டு
உணவு பொருட்களின் தரம் குறைவு தொடர்பாக 1663 புகார்கள் என மொத்தமாக 97ஆயிரம் புகார்கள் பதிவு செய்யப்பட்டு இதற்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் திமுக ஆட்சி அமைத்து திமுக ஆட்சி அமைந்தவுடன் 18 லட்சத்து 9 ஆயிரத்து 607 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் புதிதாக 51ஆயிரத்து 327 குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டு ரேஷன் கார்டு அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் அது பொதுமக்களுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும் கூறினார்.
1.67 லட்சம் விண்ணப்பம் பரிசீலனை
மேலும் புதிய குடும்ப அட்டை பெற 1 லட்சத்து 67 ஆயிரத்து 795 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் அதனை பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார். பரிசீலனை முடிவடைந்து விரைவில் புதிய அட்டைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதே போல சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, கீழ் பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துணை கிராமங்களில் நியாய விலைக்கடைகள் இல்லாத காரணத்தில் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்தார்.
புதிய ரேஷன் கடைகள்
கீழ் பென்னாத்தூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்,
நியாய விலைக்கடைகளை தொடங்க அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் செயல்படுவதாகவும், திமுக ஆட்சியமைந்த பின் இதுவரை மூவாயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிச்சாண்டியின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என பேசினார்.