கொத்தாக வரும் 3 நாட்கள் தொடர் விடுமுறை.! பள்ளி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கொண்டாட்டம்

Published : Mar 06, 2025, 07:18 AM ISTUpdated : Mar 06, 2025, 02:17 PM IST

பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
15
கொத்தாக வரும் 3 நாட்கள் தொடர் விடுமுறை.! பள்ளி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கொண்டாட்டம்

பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நெருங்கி வருகிறது. ஏற்கனவே சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கிவிட்டது. இதே போல தமிழக அரசு பாட திட்டத்தில் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஒரு வாரமாகவே தேர்வு நடைபெற்று வருகிறது. இன்றும் ஒரு சில நாட்களில் 10ஆம் வகுப்பு தேர்வானது தொடங்கவுள்ளது. மேலும்  மற்ற வகுப்புகளுக்கு ஏப்ரல் மத்தியில் தேர்வுகள் தொடங்கப்படவுள்ளது. இந்த தேர்விற்காக மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். 

25
3 நாட்கள் தொடர் விடுமுறை

இந்த நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் வார விடுமுறை நாட்களாக சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தாலே கொண்டாட்டம் தான். அந்த வகையில் வார விடுமுறையோடு சேர்த்து கூடுதலாக வரு நாள் கிடைத்தால் கேட்கவா வேண்டும் அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

35
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

அந்த வகையில் கோயில் விழாக்கல், தேவாலயம், மசூதி என அந்த அந்த மாவட்டங்களில் விஷேசங்கள் நடைபெற்றாலோ, குருபூஜை விழா நடைபெற்றாலோ உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இதன் படி, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் பிரசித்த பெற்ற  திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

45
தொடர் விடுமுறை அறிவிப்பு

மார்ச் 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படும் எனவும் இந்த விடுமுறை ஈடுசெய்யும் வகையில், 2025 மார்ச் 15ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 8ஆம் தேதி மாத்ததின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் தேதி இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

55
மார்ச் 11ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு

இதோடு சேர்த்து திங்கட்கிழமை மார்ச் 10ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறையானது கிடைக்கவுள்ளது.  இதே போல மார்ச் 11ஆம் தேதி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories