சரணடைய சொல்லு... கட்சியில் இருந்தே தூக்கி அடிச்சுருவேன்...! திமுக நிர்வாகியை எச்சரித்த ஸ்டாலின்!

Published : Jul 30, 2025, 04:41 PM ISTUpdated : Jul 31, 2025, 12:26 AM IST

சென்னையில் மாணவர் நிதின்சாய் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலரின் பேரன் சந்துரு கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து சந்துரு சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
13
நிதின்சாய் கார் ஏற்றி கொலை

சென்னை திருமங்கலம் பகுதியில் மாணவர் நிதின்சாய் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலரான கே.கே.நகர் தனசேகரன் தனது பேரன் சந்துருவை காவல்துறையில் சரணடைய வைத்துள்ளார். இதனையடுத்து, நிதின்சாய் கொலை வழக்கில் சந்துருவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமங்கலம் பகுதியில் ஒரு சொகுசு கார் மோதி நிதின்சாய் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், காதல் தகராறில்தான் நிதின்சாய் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், நிதின்சாய் மீது காரை ஏற்றி கொலை செய்தவர்களில் சென்னை கே.கே.நகரை சேர்ந்த சந்துருவும் ஒருவர் என்பது தெரியவந்தது.

23
திமுக கவுன்சிலரின் பேரன் சந்துருவின் பின்னணி

கொலை வழக்கில் தொடர்புடைய சந்துரு, சென்னை திமுக பிரமுகர்களில் ஒருவரும், மாநகராட்சி கவுன்சிலருமான கே.கே.நகர் தனசேகரனின் மகள் வழி பேரன் ஆவார். இந்த சந்துருவைத்தான் தனது அரசியல் வாரிசாக கே.கே.நகர் தனசேகரன் உருவாக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமங்கலத்தில் சொகுசு கார் ஏற்றி மாணவர் நிதின்சாயை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சந்துரு, தற்போது திடீரென போலீசில் சரணடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

33
போனில் எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்

தலைமறைவாக இருந்த சந்துரு திடீரென போலீசில் சரணடைந்ததன் பின்னணி குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே நேரடியாக தலையிட்டது தெரியவந்துள்ளது. மாணவர் நிதின்சாய் மீது மோதிய கார் திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் ஓட்டிய கார் என்ற தகவல் முதல்வர் ஸ்டாலினுக்கு உடனடியாக சென்றுள்ளது.

இதையடுத்து, தனசேகரனை தனது தொலைபேசியில் அழைத்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "உன் பேரன் சந்துருவை உடனடியாக போலீசில் சரண் அடையச் சொல்லு. இல்லையென்றால் உன்னை திமுகவில் இருந்து நீக்கிவிடுவேன்" என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சரின் இந்த எச்சரிக்கையைக் கேட்டு பதறிப்போன தனசேகரன், தனது பேரன் சந்துருவை உடனடியாக போலீசில் சரணடையச் செய்திருக்கிறார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories