உச்சத்தை தொட்ட தக்காளி விலை
தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், தக்காளி தொடர்பான உணவுகளான தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி தொக்கு போன்றவை தயாரிப்பதை வீடுகளிலும், ஓட்டல்களிலும் நிறுத்தப்பட்டது. கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய காலம் போய் எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.
குறிப்பாக தக்காளி விவசாயம் செய்த விவசாயிகளுக்கு கடந்த காலங்களில் சரியான அளவில் வருமானம் கிடைக்காத நிலையில் தக்காளியை கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் ஆந்திரா, கர்நாடக மாநில விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை விட்டு விட்டு மாற்று பயிருக்கு மாறியதால் தக்காளி உற்பத்தி குறைந்ததாக தெரிவிக்கின்றனர்.