என்ன லவ் பண்ணிட்டு கழட்டி விட பாக்குறியா! கதறிய வினிதா! விடாத காதலன்! நடந்தது என்ன?

Published : Nov 07, 2025, 04:14 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காதலை முறித்துக் கொண்டதால், பி.பார்ம் மாணவி வினிதா மீது அவரது முன்னாள் காதலர் ரஞ்சித் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

PREV
14
காதல் விவகாரம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியை சேர்ந்தவர் வினிதா (21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவாக வேலை செய்து வந்த ரஞ்சித் (25) என்பவருடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது

24
காதலியை கொலை செய்ய திட்டம்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித்தின் நடவடிக்கைகள் சரி இல்லாததால் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தது மட்டுமல்லாமல் வினிதா காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ரஞ்சித் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். நேற்று வினிதாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குளக்காரன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த ரஞ்சித் வினிதாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

34
அரசு மருத்துவமனை

அதன்படி நேற்று இரவு 11.30 மணியளவில் கொதிக்க வைத்த எண்ணெய்யை எடுத்து வந்த ரஞ்சித் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருந்த வினிதா மீது ஜன்னல் வழியாக ஊற்றியுள்ளார். இதில் வினிதாவின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் வினிதாவை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

44
பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார்

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வினிதாவின் பெற்றோர்கள் பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories