ரூ.66 கோடி மதிப்புள்ள ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

Published : Feb 15, 2025, 05:09 PM ISTUpdated : Feb 15, 2025, 05:10 PM IST

1991-93ல் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் பிப்ரவரி 14 அன்று தொடங்கின. 481 நகைகளில் 290 நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள நகைகள் மற்றும் நில ஆவணங்களும் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளன.

PREV
16
ரூ.66 கோடி மதிப்புள்ள ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!
ஜெயலலிதா நகைகள்

1991 – 1993 வரை ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்த போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையில் 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளிப் பொருட்கள், 11,344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச்கள் சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 
 

26
ரூ.66 கோடி மதிப்புள்ள நகைகள்

பறிமுதல் செய்யபப்ட்ட 66 கோடி மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்து கர்நாடக அரசின் கருவூலத்திற்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பான வழக்குகள் நடந்து வரும் நிலையில் பறிமுதல் செய்யபப்ட்ட சொத்துக்கள் மற்றும் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் படி கர்நாடக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

36
தீபா மேல்முறையீடு

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெ. தீபா ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஜெ தீபா, தீபக் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

46
நகைகள் ஒப்படைக்கும் பணி

இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்கும் பணிகள் பிப்ரவரி 14 காலை 11 மணிக்கு தொடங்கியது. மொத்தம் உள்ள 481 நகைகளில் 290 நகைகளின் எடையளவு மதிப்பீடு பணி நிறைவடைந்துள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட நகைகள் அனைத்தையும் நீதிபதி மோகன் முன்னிலையில் தமிழக அரசிடம் கர்நாடக அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

56
தமிழக அரசிடம் ஒப்படைப்பு

அந்த 290 நகைகளையும் தமிழக அரசு அதிகாரிகள் இரும்பு பெட்டிகளில் வைத்து பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு கருவூலத்தில் வைத்தனர். அதே போல் மீதம் உள்ள 191 நகைகளும் கர்நாடக கருவூல அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு எடை போடப்பட்ட நகைகள், மதிப்பீடு செய்ய வேண்டிய நகைகளும் பலத்த பாதுகாப்புடன் கருவூலத்தில் இருந்து மீண்டும் கொண்டு வரப்படுகின்றன.

 

66
1000 ஏக்கர் நில ஆவணங்கள்

மீதமுள்ள நகைகள் இன்று நீதிபதி முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த பணிகள் முடிவடைந்து 4 கன நகைகளும் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் இந்த வழக்கில் சுமார் 1000 ஏக்கர் நிலத்திற்கான நில ஆவணங்களை இன்று தமிழக அரசிசம் நீதிபதி மோகன் ஒப்படைக்க உள்ளார்.  

Read more Photos on
click me!

Recommended Stories