உலக மகளிர் தினம்.. பேரன் பேத்திகளுடான போட்டோவை போட்டு முக்கிய தகவலை சொன்ன சௌமியா அன்புமணி.!

Published : Mar 08, 2024, 11:22 AM IST

உலக மகளிர் தினத்தையொட்டி தன் பேரன் பேத்திகளுடன் உள்ள புகைபடத்தை பதிவிட்டு தன் தாயிடமருந்து தான் கற்றுக் கொண்ட பண்புகளை பேத்திகளுக்கு மட்டுமல்ல பேரனுக்கும் அந்த நற்பண்புகளை கற்றுக் கொடுப்பதாக சௌமியா அன்புமணி கூறியுள்ளார். 

PREV
13
உலக மகளிர் தினம்.. பேரன் பேத்திகளுடான போட்டோவை போட்டு முக்கிய தகவலை சொன்ன சௌமியா அன்புமணி.!
International Women's Day

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் சாதனைகள், போராட்டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான பெண்களின் உரிமையைக் கொண்டாடும் உலகம் முழுவதும் இந்த மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளை நினைவு கூறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

23
Sowmiya Anbumani

இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், அண்ணாமலை, டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உலக மகளிர் தினத்தையொட்டி தன் பேரன் பேத்திகளுடன் உள்ள புகைபடத்தை பதிவிட்டு முக்கிய தகவலை கூறியுள்ளார். 

33
Sowmiya

இதுதொடர்பாக  பாமக தலைவர் அன்புமணி இராமதாசின் மனைவியும் பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: உலக மகளிர் தினத்தையொட்டி தன் பேரன் பேத்திகளுடன் உள்ள புகைபடத்தை பதிவிட்டு தன் தாயிடமிருந்து தான் கற்றுக் கொண்ட ஒழுக்கம், நேர்மை, துணிவு, அன்பு, எளிமை ஆகிய பண்புகளை பேத்திகளுக்கு மட்டுமல்ல பேரனுக்கும் அந்த நற்பண்புகளை கற்றுக் கொடுக்க விழைவதாக பதிவிட்டுள்ளார். 

click me!

Recommended Stories