4 கிராம் தங்கம், ரூ.60ஆயிரத்திற்கு சீர்வரிசை - கோயிலில் இலவச திருமணம்.! அறநிலையத்துறை சூப்பர் திட்டம்

Published : Mar 16, 2025, 12:53 PM ISTUpdated : Mar 16, 2025, 01:07 PM IST

தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக திருமண உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் நிதி உதவி, தங்கம் மற்றும் இலவச திருமணங்கள் அடங்கும். இதுவரை 1,786 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

PREV
15
4 கிராம் தங்கம், ரூ.60ஆயிரத்திற்கு சீர்வரிசை - கோயிலில் இலவச திருமணம்.! அறநிலையத்துறை சூப்பர் திட்டம்

Tamil Nadu free marriage scheme : தமிழக அரசு சார்பாக ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமண உதவி திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் படி, ஈ.வே.ரா. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.

25
கோயிலில் இலவச திருமணம்

இந்த திட்டத்தில் 25ஆயிரம் ரூபாய் முதல் 50ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதே போல அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் இலவச திருமணங்கள் நடத்தப்படுகிறது.2022-23 ஆம் நிதியாண்டு முதல் 2024 25 ஆம் நிதியாண்டு வரை மூன்று ஆண்டுகளில் முதலாம் ஆண்டு 500 இணைகள், இரண்டாம் ஆண்டு 600 இணைகள், மூன்றாம் ஆண்டு 700 இணைகளுக்கு கட்டணமில்லா திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

35
தங்க நகை, சீர்வரிசை வழங்கும் அறநிலையத்துறை

அதன் படி இதுவரை திருக்கோயில்கள் சார்பில் 1,786 இணைகளுக்கு 4 கிராம் தங்கத் தாலியுடன் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களை திருமணங்களை நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், வடபழனி அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலில் 4 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீரிவரிசைப் பொருட்களை வழங்கியதாக கூறினார்.

45
அறநிலையத்துறை திட்டங்கள்

 இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2,713 திருக்கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,197 கோடி மதிப்பிலான 7.436.70 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு,

1.83,167 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1,20,766 எல்லைக் கற்கள் பதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த நில மீட்பு வேட்டை தொடரும். மேலும், மாநில வல்லுநர் குழுவால் 13.024 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

55
கோயில் திருப்பணிகள்

ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.5.602 கோடி மதிப்பீட்டிலான 24.252 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உபயதாரர்கள் மட்டும் ரூ.1.293 கோடி மதிப்பிலான திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒளிவு மறைவற்ற வகையில், எந்தெந்த பணிகளுக்கு உபயதாரர்கள் நிதியளிக்கின்றார்களோ அதனை முறையாக பயன்படுத்துகின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது எனவும் சேகர்பாபு கூறினார். 
 

Read more Photos on
click me!

Recommended Stories