சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 மதியம் 1 மணி வரை ஒட்டுமொத்தமாக 10,663 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது ஏப்ரல் 21 (இன்று) முதல் நாளில் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,404 சிறப்புப் பேருந்துகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 3,496 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஏப்ரல் 22 (நாளை) இரண்டாம் நாள் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், வழக்கமான 2,092 பேருந்துகளுடன் மிக அதிக அளவாக 3,570 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அன்று மட்டும் மொத்தம் 5,662 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்.
ஏப்ரல் 23 (நாளை மறுநாள்) தேர்தல் தினமான அன்று மதியம் 1:00 மணி வரை மட்டும் 905 வழக்கமான பேருந்துகளும், 600 சிறப்புப் பேருந்துகளுமாக மொத்தம் 1,505 பேருந்துகள் இயக்கப்படும் எனத் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் மொத்தம் 5,089 வழக்கமான பேருந்துகளும், கூடுதலாக 5,574 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 10,663 முறை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.