திமுகவினரே திருந்துங்கள்! இல்லைனா ஆட்சி கலைக்கப்படும்! எச்சரிப்பது யார் தெரியுமா?

Published : Feb 22, 2025, 07:36 AM ISTUpdated : Feb 22, 2025, 07:52 AM IST

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவினரே திருந்துங்கள், இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள் என பாஜக எச்சரித்துள்ளது.

PREV
15
திமுகவினரே திருந்துங்கள்! இல்லைனா ஆட்சி கலைக்கப்படும்! எச்சரிப்பது யார் தெரியுமா?
திமுகவினரே திருந்துங்கள்! இல்லைனா ஆட்சி கலைக்கப்படும்! எச்சரிப்பது யார் தெரியுமா?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக - பாஜகவுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திமுக அரசின் திட்டங்களை தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் தமிழகத்தில் தினமும் கொலை, பாலியல் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் குற்றம்சாட்டை முன்வைத்து வருகிறார்.

25
அண்ணாமலை

இந்நிலையில் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் தமிழக கல்வி திட்டங்களுக்கு வர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக மத்திய பாஜக அரசுக்கும் தமிழக அரசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவினரே திருந்துங்கள். இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள் ஏ.என்.எஸ்.பிரசாத் எச்சரித்துள்ளார். 

இதையும் படிங்க: இப்படியே போச்சுனா! தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும்! பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

35
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்

இது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மாணவர்கள், இளைஞர்களிடையே போதை கலாச்சாரம், கொலை, கொள்ளை என மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திமுக அரசின் மீதான மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப ‘கெட் அவுட் மோடி’ என ஹேஸ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

45
திமுக அரசு

திராவிட மாடல் தலைவர்கள் முதல், புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் வரை தமிழகத்துக்கான மாற்றம் அல்ல. ஏமாற்றம் என்பதே உண்மை. தமிழகத்தின் அரசியல் குப்பைகளாக செயல்படும் இந்த கட்சிகளை, தமிழக மக்கள் தங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை வேரறுக்கும் இந்த மக்கள் விரோத சக்திகளுக்கு தகுந்த பாடத்தை வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் கற்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: அதிபரே சொல்லிட்டாரு! மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பகீர்!

55
பிரதமர் மோடி

இந்தி மொழியை திணிப்பதாக பிரதமர் மோடி மீது அவதூறு சுமத்தி, தமிழக மாணவர்களின் நலனை புறக்கணித்து கீழ்த்தரமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். கலைக்கப்பட வேண்டிய திமுக ஆட்சியை, பெருந்தன்மையுடன் மோடி அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. திமுகவினரே திருந்துங்கள். இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள். கட்டாய ஆட்சி மாற்றத்துக்கு வழியை உருவாக்காதீர்கள் என்று  ஏ.என்.எஸ்.பிரசாத் எச்சரித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories