அரசு ஓய்வூதியம் பெறுபவர்களா நீங்கள்.! வெளியான முக்கிய அறிவிப்பு

First Published | Oct 25, 2024, 1:26 PM IST

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வரக்கூடிய பென்சன் பணம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்மாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அரசு ஓய்வூதியம்

அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு மாதம், மாதம் கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்தே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்களது வங்கி கணக்கை குறுக்கு வழியில் முடக்கி பணம் பறிக்கும் செயல் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணைய மோசடியாளர்கள் தங்களை அரசு அதிகாரிகள் போல போலியாக அடையாள படுத்திக்கொண்டு ஓய்வூ பெற்ற பணியாளர்களிடம் ஓய்வூதியம் தொடர்பாக தங்களுக்கு உதவி செய்வதாக சூழச்சி செய்து அவர்களின் வங்கி கணக்கு மற்றும் பணம் இருப்பு தொடர்பான தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Government scheme pension

மோசடி நடப்பது எப்படி?

மோசடிக்காரர்கள் ஓய்வூதிய அலுவலக அதிகாரிகள் பேசுவதாக சொல்லி பொது மக்களை தொடர்பு செய்வார்கள். தொடர்பு கொண்டு மாற்று திறனாளி திட்டம், வயது முதிர்ந்தோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றின் கீழ் தங்களுக்கு பணம் வந்துள்ளது என்று மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் சொல்லி மேற்படி பணத்தை பெற தங்களுக்கு உதவி செய்வதாக கூறி சிக்க வைப்பார்கள். பின்னர் தங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று சொல்லி அவர்களின் பண இருப்பு விபரம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான முக்கிய தகவல்களை அவர்களிடம் பெற்று அவர்களுக்கு பணம் அனுப்புவதாக சொல்லி அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர்.

Tap to resize

cyber crime

பணத்தை ஏமாற்றி பறிக்கும் கும்பல்

மோசடிக்காரர்கள் முக்கிய தகவல்களை பாதிக்கபட்டவர்களிடம் whatsApp மூலம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப சொல்லி கேட்டு பெறுகின்றனர், அதன் மூலம் எளிதாக பணம் தொடர்பான தகவல்களை பெற்று மோசடி செய்கின்றனர். குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் இதில் அதிகம் பாதிக்கபடுகின்றனர். இது அவர்களுக்கு பொருளாதார பாதிப்பு மட்டும் இல்லை மன ரீதியாகவும் மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஓய்வூதியம் அவர்களின் வாழ்வாதரம் தொடர்பானது.
 

தடுப்பது எப்படி.?

அரசு அலுவலகத்திலிருந்து அழைப்பதாகக் கூறும் எந்தவொரு நபரின் அடையாளத்தையும் சரிபார்க்கவும். தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களை தொலைபேசியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் அடையாளம் காணாத எண்களிலிருந்து அழைப்புகளைப் பெற்றால் அதனை தவிர்த்து விடுங்கள். அறியப்படாத அல்லது அந்நியர்கள் அனுப்பிய சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்யவோ பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம். ஏனெனில் அவை உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி தரவை சமரசம் செய்யலாம்

அலர்ட் மெசேஜ்

இது போன்ற அழைப்புகளை துண்டித்து விட்டு குறிப்பிடப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யவும். தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள். மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!