என்னை விட்டுடுங்க கதறிய கல்லூரி மாணவி! விடாத மூன்று கொடூரன்கள்! பரபரக்கும் இறுதி விசாரணை! தீர்ப்பு எப்போது?

Published : Feb 25, 2026, 12:42 PM IST

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்துக்குள்ளாகவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

PREV
14

மதுரையை சேர்ந்த 21 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனது ஆண் நண்பருடன் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை விமான நிலையம் பின்புறத்தில் இருக்கக்கூடிய இடத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் இவர்களை பார்த்துள்ளனர். பின்னர் அந்த இளைஞரை அரிவாளால் தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்று கத்தி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

24

அந்த கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிர்வாண நிலையில் கிடந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையிலும், படுகாயமடைந்த ஆண் நண்பர் 10 தையல்கள் போடப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

34

இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி மூன்று பேரையும் சுட்டு பிடித்தனர். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்துக்குள்ளாகவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

44

சுமார் 150 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இன்றைய தினம் கருப்பசாமி (A1), காளீஸ்வரன் (A2) மற்றும் தவசி (A3) ஆகிய மூவரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இன்று மதியம் அரசு தரப்பு வாதங்கள் விரிவாக நடைபெற உள்ளன. இந்த வாதங்கள் முடிந்த பிறகு எதிர் தரப்பு வாதத்திற்கு பிறகு நீதிபதி தீர்ப்பு வழங்கும் தேதியை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories