School Leave: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
தமிழகத்தில் பொது விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழா, மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் விழா மற்றும் தியாகிகளின் நினைவு தினங்களில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
26
கிறிஸ்துமஸ் பண்டிகை
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்தவர்கள் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமசை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதற்காக கிறிஸ்தவர்கள் இயேசு பிறப்பை குறிக்கும் ஸ்டார்களை வீடுகளில் மாட்டி வருகின்றனர். வீடுகளில் வண்ண வண்ண விளக்குகளை பொருத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கிறிஸ்தவ தேவாலயங்களில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
36
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் உள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முந்தைய நாள் அதாவது 24ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் டிசம்பர் 24ம் தேதி (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
56
டிசம்பர் 28ம் வேலை நாளாக அறிவிப்பு
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 28ம் தேதி சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
66
டிசம்பர் 24ம் தேதி அரசு அலுவலங்கள் செயல்படும்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் டிசம்பர் 24ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கூறப்பட்டுள்ளது.