ஹரிஷோட அப்பா ஜே. விநாயகம் போலீஸ்ல ஒரு புகார் கொடுத்திருக்கார். ஜேசன் சாமுவேல் அப்படிங்கிற இன்னொரு இன்ஃப்ளூயன்ஸர், தன்னோட பையனை தொடர்ந்து சைபர் புல்லிங் செஞ்சதாகவும், அவதூறான போஸ்ட்களை போட்டு மிரட்டியதாகவும் அவர் அந்த புகார்ல சொல்லியிருக்கார். குறிப்பா, அக்டோபர் 18-ம் தேதி, ஹரிஷ் மக்களை ஏமாத்துறார்னு சொல்லி ஜேசன் சாமுவேல் சில வீடியோக்களை வெளியிட்டிருக்கார்.
தற்கொ*லைக்கு முன் வீடியோ!
தற்கொ*லை செஞ்சுக்குறதுக்கு முன்னாடி ஹரிஷ் ஒரு வீடியோவை ரெக்கார்ட் பண்ணியிருக்கார். தன்னோட இந்த முடிவுக்கு ஜேசன் சாமுவேல்தான் காரணம்னு அதுல அவர் சொல்லியிருக்கார். தன்னோட எல்லா சோஷியல் மீடியா அக்கவுண்ட்களையும் முடக்குவேன், புதுசா எந்த அக்கவுண்டும் ஓபன் பண்ண விடமாட்டேன்னு ஜேசன் மிரட்டியதா ஹரிஷ் அந்த வீடியோவுல குற்றஞ்சாட்டியிருக்கார்.