முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சுத்துப்போடும் சிபிஐ! எந்த வழக்கில் தெரியுமா?
கடந்த 2016 - 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்த கால கட்டத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரிடம் 3 கோடி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அடுத்தடுத்து பல புகார்கள் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
24
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஆனால், இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவானார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் 2022ம் ஆண்டு பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜனவரி 12ம் தேதி 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
34
சென்னை உயர்நீதிமன்றம்

44
சிபிஐ
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன், விஜய நல்லதம்பி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.