TVK : 5 + 6 சந்தேகம்.. எம்ஜிஆர் வழியில் கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த விஜய்.. மே 7ல் சர்ப்ரைஸ்

Published : May 06, 2026, 10:52 AM IST

TVK Government Formation : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தவெக (TVK), ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை தேடி வருகிறது. அதிமுக கூட்டணி முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு வரை பல அரசியல் கணக்குகள் பேசப்படுகின்றன.

PREV
16
முதலமைச்சர் ஆகப்போகும் விஜயின் பிளான்

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தற்போது தளபதி விஜய். நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்ட அவர், அரசியலிலும் அதே வேகத்தில் முன்னேறியிருக்கிறார். 2024-ல் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் (தவெக), வெறும் இரண்டு ஆண்டுகளில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களில் இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு குறைவாக இருப்பதே தற்போதைய அரசியல் சதுரங்கத்தின் மையமாக மாறியுள்ளது.

26
11 எம்.எல்.ஏ-க்களே அரசியல் கணக்கின் மையம்

விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதன்பிறகு தவெக-வின் பலம் 107 ஆகக் குறையும். இதனால் கூடுதல் ஆதரவை பெறுவது அவசியமாகியுள்ளது. அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவல்களின்படி, இந்திய தேசிய காங்கிரஸின் சில எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதரவு கிடைத்தால் தவெக-வின் பலம் 112 வரை உயரக்கூடும். அதன் பிறகு முக்கிய எண்ணிக்கையை நிரப்ப சிறிய கட்சிகளின் ஆதரவு பங்காக மாறுகிறது.

36
திமுக கூட்டணியில் உருவாகும் குழப்பம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இக்கட்சிகள் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் இருந்து வருவதால், திடீரென விஜய்யின் பக்கம் திரும்புவார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தேர்தல் முழுவதும் திமுக அரசை கடுமையாக விமர்சித்த விஜய், ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார். இதனால் திமுக தரப்பில் இருந்து ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது. “எதிர்க்கட்சியாக அமர தயாராக இருக்கிறோம், ஆனால் ஆதரவு இல்லை” என்ற மனநிலையில்தான் திமுக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

46
அதிமுக கூட்டணி சாத்தியமா?

இதற்கிடையில், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே விஜய்க்கு எளிதான பாதையாக இருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் தவேக தரப்பினர் தொடர்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவுகின்றன. கூட்டணி சாத்தியமாகவில்லை என்றால், சில எம்.எல்.ஏ-க்களை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கும் முயற்சிகளும் நடக்கலாம். இது ஆபத்து நிறைந்த அரசியல் நகர்வாக இருந்தாலும், ஆட்சியை விரைவாகப் பிடிக்கும்.

56
நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய கணக்கு

கூட்டணி அரசியல் தோல்வியடைந்தாலும் விஜய்யின் அணியில் இன்னொரு கணக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சில எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்காமல் இருந்தால், பெரும்பான்மைக்கான எண்ணிக்கை குறையும். 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் 30-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க வரவில்லை என்றால், பெரும்பான்மை இலக்கு 103 வரை குறையக்கூடும். இது தற்போதைய தவேக பலத்திற்கு மிக அருகில் உள்ளது, இந்த வியூகமும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

66
ஆளுநரின் முடிவை நோக்கிய தமிழக அரசியல்

இப்போது தமிழக அரசியலின் முழு கவனமும் ஆளுநரின் அடுத்த கட்ட முடிவை நோக்கி திரும்பியுள்ளது. விஜய்யிடம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தைக் கேட்பாரா அல்லது நேரடியாக ஆட்சி அமைக்க அழைக்கப்பட்ட பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பாரா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. சினிமாவை விட்டு முழுமையாக அரசியலுக்கு வந்த விஜய், தற்போது முதலமைச்சர் பதவிக்கு மிக அருகில் நிற்கிறார். மே 7-ஆம் தேதி பதவியேற்பு நடைபெறலாம் என்ற தகவல்கள் பரவினாலும், கூட்டணி கணக்குகளும் ஆதரவு அரசியலும் தான் இறுதி முடிவை தீர்மானிக்கப்போகின்றன. எம்ஜிஆர் பாணியில் விஜய் முடிவை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசியலில் அடுத்த சில நாட்கள், ஒரு திரில்லர் திரைப்பட கிளைமாக்ஸை விட குறையாமல் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Read more Photos on
click me!

Recommended Stories